கோவை,அக்.30- மாணவர்கள் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் தோல்வி அடைவதால், பள்ளிகளில் 8ஆ-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி(ஆர்.டி.இ.), பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கப் படுகிறது. இதனால் ஒவ் வொரு வகுப்பிலும் மாண வர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் அதில் ஈடு பாடு காட்டுவது இல்லை.
10-ஆம் வகுப்புக்கு முன் னோட்டமான 9-ஆம் வகுப்பில் அனைத்து பாடங் களையும் நன்றாக படித் தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். 8ஆ-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அடையும் மாணவர்களில் சிலர் 9 மற்றும் 10ஆ-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முறையை தொடர்வது பற்றி ஆய்வில் இறங்கியுள்ளது.
ஆனால் தனியார் பள்ளி களில், சரியாக படிக்காத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு, அனுப் புகிறார்கள்.
அரசு பள்ளிகளில் இந்த நிலை இல்லை. இதனால் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட திட்ட மிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக 8ஆ-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை கைவிடப்படலாம் என்று தெரிகிறது
No comments:
Post a Comment