2014
07
Jul
கோவை: தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி வளாகத்தில் திறந்த வெளி கிணறுகள் இருந்தால் மூட வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மழைக் காலங்களில் இடி, மின்னலில் இருந்து பாதுகாக்க மாணவர்கள் மரங்களில் கீழ் ஒதுங்கக் கூடாது. பள்ளிக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவர்கள் உரிய பாதுகாப்பின்றி செல்லக்கூடாது. பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த மின் கம்பங்களுக்கு அருகில் நிற்பதோ, அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ கூடாது.
மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் கவனமாக செல்வதுடன், திறந்த நிலையில் உள்ள மழைநீர் கால்வாய் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அறுந்த அல்லது துண்டித்த நிலையில் மின்சார வயர்கள் இல்லாதவாறு தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் சிதிலமடைந்த, பயன்பாடற்ற வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர் ஆகியவைகளை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி மூடப்பட்டு பூட்டியிருக்க வேண்டும்.ஆய்வகத்தில் பயன்படுத்தக் கூடிய எரிவாயு உருளைகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய திரவ எரிபொருளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பள்ளிகளில் முதலுதவி செய்யும் வகையில், பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அனைத்து மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்களும் பள்ளியில் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருத்தல் என 24 நடைமுறைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்
No comments:
Post a Comment