ஜூன்2ல் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வி இயக்குநர் தகவல்
பதிவு செய்த நேரம்:2014-05-29 10:46:51
மதுரை, : ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறினார்.
பள்ளி கல்வித்துறையில் தணிக்கையில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்வதற்காக கணக்காயர் கூட்டமைப்பு கூட்டம் மதுரையில் சௌராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில கணக்காயர் சந்தானவேல், பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தணிக்கையில் ஏற்பட்ட இடர்பாடுகளை உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது.
ராமேஸ்வர முருகன் கூறுகையில், தமிழகத்தில் ‘திட்டமிட்டபடி வரும் கல்வி ஆண்டிற்காக ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 16ம் தேதியன்று பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும். இதில் எவ்வித மாற்றம் இல்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துள்ளது. 867 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமச்சீர் கல்வியால் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்றார்
.
No comments:
Post a Comment