வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியதால் அதிர்ச்சி
பதிவு செய்த நேரம்:2014-03-13 10:56:35
நாகை, : நாகை மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 1,300 பேருக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் முழு வதும் உள்ளிருப்பு போராட் டம் நடைபெற்றது.
மறுநாள் 11 ஒன்றியங்களிலும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 1,300 ஆசிரியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும்பா லான பள்ளிகளில் தனியார் ஆசிரியர் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. நாகை நெல்லுக்கடை நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்டன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, சென்னையில் இருந்து தமிழ் நாடு தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது, பள்ளிக்கு வந்து பணி செய்யாமல் இருந்த ஆசிரியர்கள் மீது அரசு பணியாளர் நன்னடத்தை விதி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 26ம் தேதி நடந்த அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை நிறத்தம் செய்ய வேண்டும். இந்த ஊதியத்தை கருவூலத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை விண்ணப்பம் பெறப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து ஆணை வழங்க வேண்டும். இது குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொ லிக்கும் என போராட்டத் தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment