மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
நாகப்பட்டினம்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத
அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் சிக்கலில்
நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை
தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர்
ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை வட்டார
பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையராக கீழ்வேளூர் வட்டார
செயலாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு
செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை
காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க தமிழக அரசை கேட்பது, பாராளுமன்ற தேர்தல்
அலுவலர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்- ஆசிரியைகள் வாக்குச்சாவடிகளுக்கு
தேர்தலுக்கு முன்பு சென்று சேர்வது மற்றும் தேர்தல் முடிந்தவுடன்
வாக்குச்சாவடி மையங்களில் இருந்து திரும்ப வருவது வரை சிரமமும்,
பாதுகாப்பின்மையும் உள்ளதால், வாக்குச்சாடிகளுக்கு அச்சமின்றி சென்று வரும்
வகையில் அருகில் உள்ள பஸ் நிலையம் வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர
மாவட்ட கலெக்டரை கேட்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு, மாவட்ட பிரதிநிதிகள்
மைக்கேல்சாமி, ஆவராணி ஆனந்தன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment