Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Friday, January 31, 2014
Teachers profile FORM (9 Pages)
பார்வை :www.testfnagai.blogspot.com
www.facebook.com/nagai.koottani
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Thursday, January 30, 2014
Wednesday, January 29, 2014
Tuesday, January 28, 2014
Sunday, January 26, 2014
Friday, January 24, 2014
Monday, January 20, 2014
Sunday, January 19, 2014
Friday, January 17, 2014
Thursday, January 16, 2014
வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு
சென்னை: தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக்கும் திறன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதேபோல், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31% பேர் மட்டுமே, பகுப்பு (division) செயல்பாட்டு திறனைப் பெற்றுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: முதல் வகுப்பில் படிக்கும் 53.4% குழந்தைகளுக்கு, தங்களின் தாய்மொழி எழுத்துக்களை கண்டறிய முடியவில்லை. அவற்றில் 34.2% குழந்தைகள் மட்டுமே அந்த திறனைப் பெற்றுள்ளனர்.
10.3% குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் படிக்க முடிகிறது மற்றும் 2%க்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே தங்களின் பாடப் புத்தகங்களைப் படிக்க முடிகிறது. இவ்வாறு பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன
Wednesday, January 15, 2014
Tuesday, January 14, 2014
Monday, January 13, 2014
இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்தால் காத்திருக்கும் வரவேற்பு
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்புவரை இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர். இதனால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. படித்து முடித்தவர்களின் எண்ணிக்கையும் மிகுதியானது.
தமிழகத்தில் 9 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரி (DIEAT) 29, அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 42, தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 35, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 615 உள்ளன. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உள்ள 280 இடங்களில், 245 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரியில் 2400 இடங்களில் 1999 இடங்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 2100 இடங்களில் 1275 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 38,000 இடங்களில் 5263 இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமானோர் படித்து முடித்துவிட்டதால் இப்படிப்புக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்துள்ளது. தகுதியுடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை தேர்வு செய்து படிப்பதன்மூலம் எளிதில் அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்களைவிட, புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தவர்களே அரசுப் பணிக்கு அதிகம் சென்றுள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பை நல்ல பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து முடிப்பவர்களுக்கு என்றுமே வாய்ப்பு காத்திருக்கும்.
முன்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைத்து வந்தது. தற்போது, அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதன்மூலம், இடைநிலை ஆசிரியராக முடியும்.
அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. எனவே, இப்படிப்பில் சேர்ந்து அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எஸ்சி. என பட்டப்படிப்பு சேர்வது புத்திசாலித்தனம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்து பி.எட்., எம்.எட். என படிக்க வேண்டும். இவ்வாறு மேற்படிப்புகளை படிப்பதன்மூலம், இடைநிலை ஆசிரியர்கள் இளநிலை, முதுநிலை பணி வாய்ப்பு பெறலாம். எம்.பில்., பிஎச்.டி. வரை படிப்பவர்கள் கல்லூரிகளில் பேராசிரியராகலாம்.
எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு படிப்பவர்கள் அடுத்தடுத்த பட்டப்படிப்புகளை படிப்பதால் கல்வித் தரத்தை உயர்த்திக்கொண்டு நல்ல நிலைக்கு செல்ல முடியும். தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பி.எட். கல்வித் தகுதி கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர் பட்டயப் படிப்புடன் கூடுதலாக பட்டப்படிப்பு படிப்பதால், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்
பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு
2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 2,700 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மையங்களிலும் விரைவில் ஒரு புதிய கணினி மென்பொருளை பயன்பாட்டுக்கு கோண்டு வந்து அதன் மூலம் சேவை கண்காணிப்பை அதிகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
NMMS DATE EXTENDED
mD¥òe®
ÂU. F. njtuh#‹, v«.V., v«.v£.,
muR¤ nj®ÎfŸ Ïa¡Fe®,
br‹id –
600 006.
|
bgWe®
mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ,
fšé mYty® (khefuh£Á) br‹id,
mid¤J kht£l¡ fšé mYty®fŸ,
mid¤J kht£l¡ bjhl¡f¡ fšé mYty®fŸ,
mid¤J
cjé bjhl¡f¡ fšé mYty®fŸ,
|
e.f.v©.
054617 /B4 /NMMS/2013 ehŸ :
10 . 01.2014
Iah/m«ikp®,
bghUŸ :
|
njÁa tUthŒtê k‰W«
Âw‹go¥ò cjé¤ bjhif £l¤ nj®Î (NMMS) 2013 – nj®t®fë‹ é©z¥g§fis
Ïizajs« _y« gÂnt‰w« brŒjš – fhy Ú£o¥ò F¿¤J.
|
gh®it :
|
Ï›tYtyf Ïnj v©â£l foj«
ehŸ: 13.12.2013
|
- - - -
njÁa
tUthŒtê k‰W« Âw‹ go¥òjé¤ bjhif £l¤ nj®Î (NMMS)
2013 r«gªjkhd nj®t®fë‹ é©z¥g§fis Ïizajs« _y« gÂnt‰w« brŒa V‰fdnt m¿é¡f¥g£oUªj
nj¡F¥ gÂyhf 11 .01.2014 Kjš 20.01.2014
tiu Ïizajs« _y« gÂnt‰w« brŒa fhy Ú£o¥ò brŒa¥gL»wJ v‹gij¤ bjçé¤J¡ bfhŸ»nw‹.
Ïa¡Fe®
efš: mid¤J muR¤ nj®ÎfŸ k©ly¤ Jiz Ïa¡Fe®fŸ,
Sunday, January 12, 2014
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை
"அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர், டியூஷன் எடுக்கக் கூடாது; மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து, தனி வகுப்பு (டியூஷன்) எடுப்பதாகவும், "டியூஷனுக்கு" வராத மாணவ, மாணவியரிடம், வகுப்புகளில், ஆசிரியர், கடுமையாக நடந்து கொள்வதாகவும், அரசின் கவனத்திற்கு, புகார் வந்துள்ளது.
ஆசிரியர்களின், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, சில ஆசிரியர்கள் டியூஷன் எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கல்வித்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை, ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களிடம் வழங்கி அதில், அவர்களின் கையெழுத்தை பெற்று கோப்பில் பராமரிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
Saturday, January 11, 2014
Subscribe to:
Posts (Atom)