கோவை,: கோவை பேரூர் அடுத்துள்ள தீத்திப்பாளையம் அரசுப் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதியன்று ஒரு நாள் சுற்றுலா பயணமாக அய்யசாமி மலைக்கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி மாணவி ரஞ்சிதா உயிரிழந்தார். மேலும் 212 மாணவிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவத்தால் தீத்திப்பாளையம் கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். மன அதிர்ச்சியை களையும் வகையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் தீத்திப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி நாளை ஆலோசனை வழங்குகிறது.
இதுகுறித்து உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில்,“விபத்தில் படுகாயமடைந்த மாணவிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் விபத்தின் போது ஏற்பட்ட மன அதிர்ச்சியை போக்குவதற்காக எங்களின் சிறப்புக்குழு நாளை தீத்திப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறது. மேலும் கோவையின் சிறப்பு உளவியல் ஆலோசகர்களான அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் , பிஎஸ்ஜி கல்லூரியின் பேராசிரியர் ஜோதிமணி தலைமையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி வழிகாட்டுதலின் பேரில் நாளை பள்ளிக்கு சென்று ஆலோசனை வழங்குகிறோம்’ என்றார்
.
No comments:
Post a Comment