- மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் 1397 தொடக்கப்பள்ளிகள், 264 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 3.18 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த மாணவ, மாணவியரின் தகவல் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான விபரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றும் பணி 11 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
- எல்லா பள்ளிகளிலும் இணையதள வசதி இல்லை. அதனால் மாவட்ட கல்வி நிர்வாகம் பொன்னேரி மற்றும் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி 158 கணினிஆசிரியர்கள் மூலம் தகவல் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முழுமை அடையவில்லை.அதில் உள்ள பிழைகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனல் கணினி வசதி இல்லாத பள்ளிகள் பிழைகளை திருத்தம் செய்ய முடியாமல் உள்ளனர். தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வசதி கிடையாது.
- அதனால் தனியார் மையங்களில் பணிகளை முடிக்க முயன்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி அன்று மாணவர்களின் அடையாள அட்டை எண்ணையும் ஸ்மார்ட் கார்டில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. இப்பணியை முழுமையாய் முடிக்க முடியாமல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Wednesday, November 13, 2013
15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment