மதுரை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஜோதி ஆபிரகாம் (45) ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஜூலை 21ல் நடந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) தேர்வு எழுதினேன். தேர்வில் 111 மதிப்பெண் பெற்றேன். வரலாறு பிரிவில் 173 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. என்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை. ஆனால் என்னைப்போல் 111 மதிப்பெண் பெற்ற வேறு நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டாக காத்திருக்கிறேன். பி.எட் படித்துள்ளேன். இதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருந்தால் 115 மதிப்பெண் பெற்று இருப்பேன். எனக்கு 43 வயதாகிறது. இது கடைசி வாய்ப்பு. எனவே, என்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதேபோல், விலங்கியல் பிரிவில் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படாத முதுகுளத்தூரை சேர்ந்த சந்தானகுமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்து, ‘2270 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் கடைசி கட்&ஆப் மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்களுக்கு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே பணி நியமனம் வழங்கப்படும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள், கடைசி கட்&ஆப் மதிப்பெண் பெற்றவர்களின் விபரங்களை கோர்ட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிடக்கூடாதுÕ என உத்தரவிட்டார்.
14 மையங்களில் நடக்கிறது
தமிழ் பாடத்திற்கான 605 பணியிடங்கள் தவிர பிற பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும், நாளையும் கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென் னை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் நடக்கிறது.ஆங்கிலம் & 343, கணிதம் & 288, இயற்பியல் & 228, வேதியியல் & 220, உயிரியல் & 193, விலங்கியல் & 181, வரலாறு & 173, புவியியல் & 21, பொருளியல் & 257, வணிகவியல் & 300, மனையியல் & 1, உடற்கல்வி இயக்குநர் நிலை (1) & 17, நுண்ணுயிரியல் & 30, உயிர் வேதியியல் & 16, தெலுங்கு & 2 என அந்தந்த பாடங்களின் காலியிடங்களுக்கு தகுந்தவாறு 1:1 விகிதாசார அடிப்படையில் 2,270 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன
ர்
No comments:
Post a Comment