தெரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் சில இணையதளங்கள் இதோ...
ஏற்கெனவே தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கல்வி நிறுவனமான இதில், சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, தமிழ் - தமிழ் அகர முதலிகள் போன்றவற்றை இணையதளத்திலேயே பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.tamilvu.org/library/dicIndex.htm
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பல்வேறு மொழியியல் துறைகளை அமைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை பல்வேறு தொன்மையான அகராதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேவையான சொற்களுக்கு தகுந்த அர்த்தம் என்பதைக் கண்டறியலாம்.
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius
க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்- ஆங்கில அகராதியின் முதல் பதிப்பை அதன் இணையதளத்தில் இலவசமாகப் பார்வையிடலாம். தற்போதைய, விரிவாக்கப்பட்டுத் திருத்திய பதிப்பு கட்டணச் சேவையாகத் தரப்படுகிறது. இதில் புதிய வார்த்தைகளையும் அதற்கான அர்த்தங்களையும் இணையதளத்தின் மூலம் வாசகர்கள் பரிந்துரைக்கலாம். தற்காலத் தமிழில் வழங்கப்படும் முக்கியமான 369 வினைச்சொற்கள் குறித்த தமிழில் வினைச் சொற்களின் வடிவங்களுக்கான கையேடும் இணைய தளத்தில் உள்ளது. அதை, இலவசமாகப் படிக்கலாம். தற்காலத் தமிழில் பயன்படுத்தப்பட்டு வரும் 35 லட்சம் தமிழ் வார்த்தைகளைக் கொண்ட சொல் வங்கியும் இந்த இணையதளத்தில் உள்ளது. வாசகர்களின் வசதிக்காக, தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்வதற்கான வசதியும் இணையதளப் பக்கத்திலேயே இணைத்து இருக்கிறார்கள். எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும் இணைய தளம் இது.
www.crea.in
லிப்கோ டிக்ஷனரியின் இணையதளத்தில் தமிழ் சொற்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில அர்த்தங்களைப் பார்க்கலாம். ஆங்கில வார்த்தைகளுக்கான பொருளை தமிழில் அறிந்துக்கொள்ள முடியும்.
லிப்கோ டிக்ஷனரியின் இணையதளத்தில் தமிழ் சொற்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில அர்த்தங்களைப் பார்க்கலாம். ஆங்கில வார்த்தைகளுக்கான பொருளை தமிழில் அறிந்துக்கொள்ள முடியும்.
www.lifcobooks.com/tamildictionary/default.aspx
சில இணையதளங்களில் ஒரு ஆங்கில வார்த்தையை தட்டச்சு செய்தால் அதற்கான பொருள் என்னென்ன என்பதை பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இரண்டு தளங்கள். இந்தத் தளங்களுக்குச் சென்றால் ஏராளமான பொருட்களுடன் வார்த்தை வடிவமைப்பையும் பெறலாம்.
www.tamildict.com/, www.dictionary.tamilcube.com
பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் இருக்கிறது. இதற்கு சரியான ஆங்கிலத்தின் அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு ஏற்றது கூகுள் இணையதளம். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றம் செய்யும் வசதியை வழங்கி இருக்கிறது.
https://translate.google.co.in/
No comments:
Post a Comment