டெல்லியில் இன்று நடைபெற்று வரும் கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டத்தை, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ புறக்கணித்துள்ளார். இதனால், மனிதவளத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்துவது, ஆசிரியர் நலன் ஆகியன தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொருட்டு கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை பல்லம் ராஜூ புறக்கணித்துள்ளார்.
தனி தெலுங்கானா அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பதவியை பல்லம் ராஜூ ராஜிநாமா செய்தார்.
அமைச்சர்கள் கூட்டங்களை தவிர்த்து வரும் பல்லம் ராஜூ, டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்