By Parvathi Arunkumar
First Published : 08 October 2013 10:32 AM IST
தனியார் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக இரண்டாம் பருவத்திற்கான 81 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடுப் பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடுப் பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் தனியார் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக 1 கோடியே 58 லட்சம் புத்தகங்கள் இரண்டாம் பருவத்துக்கு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment