எண்ணூர் காமராஜர் நகரில் மாநகராட்சி தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, சுகாதாரமற்ற கழிப்பிடம், பழுதடைந்த சமையல் அறை போன்ற குறைபாடுகள் உள்ளன.
இப்பள்ளி தலைமை ஆசிரியர், கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், மாணவ, மாணவிகளால் படிக்க முடியவில்லை. இது பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பெற்றோர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணகுமாரிடம், அடிப்படை வசதி இல்லை. இலவச புத்தகம், பைக்கு தலைமை ஆசிரியர் பணம் கேட்கிறார், இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் புகார் கூறினர். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தபின் கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment