பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த சாலை மறியலால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் 30ஆம் தேதி வரை தங்கள் போராட்டத்தை தொடருவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மறியல் செய்தவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment