SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, August 17, 2013

தர்மபுரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்களுடன் 5 பேர் கைது

தர்மபுரியில் இன்று காலை ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி வினாத்தாள் கொடுத்து பரீட்சை எழுதியவர்களை ஏமாற்றி பணம் வசூலித்தது விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் தேர்வு எழுதினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இன்று வினாத்தாள் வெளி யானதாக வதந்தி பரவியது.
இதுபற்றி பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் வைத்து 5 பேரை கைது செய்து விசாரித்தனர். 
விசாரணையில் ஒருவரைத் தவிர மற்ற 4 பேரின் பெயர் விவரங்கள் தெரிய வந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. கணபதி, கிருஷ்ணகிரி
2. கிருஷ்ணப்பா, ஓசூர்
3. சந்திரசேகர், ஓசூர்
4. அசோக்குமார், தளி
கைதான 5 பேரிடம் இருந்தும் வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அந்த வினாத் தாள்கள் இன்று பரீட்சைக்கு வந்த வினாத்தாள்கள் அல்ல என்றும, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இந்த போலி வினாத்தாள்களை காட்டி ஆசிரியர்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த போலி வினாத் தாளை கொடுத்து ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்த தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் வினாத்தாள் வாங்கிய ஆசிரியர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தேர்வு வினாத்தாள் வெளியானது. அப்போது தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆனால் இன்று தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் கொண்டு வந்து வைத்து தேர்வு எழுதியவர்களுக்கு வினியோகித்தது. இதனால் வினாத் தாள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியர்களை ஏமாற்றி இன்று போலியாக அந்த கும்பலே வினாத்தாள் அச்சிட்டு வெளியிட்டு ஏமாற்றி பணம் பறித்த போது போலீசில் சிக்கிக் கொண்டது.
போலி சான்றிதழ், போலி அரசு முத்திரைகள் என்று பல வழிகளில் ஏமாற்றும் கும்பல் வந்தாலும் அவர்களை போலீசார் பிடித்து விடுகிறார்கள். இன்று உரிய நேரத்தில் பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் போலீசாரிடம் அந்தக் கும்பல் சிக்கிக் கொண்டது. இவர்கள் வேறு எந்த மாவட்டத்தில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டார்களா? என்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
2.72 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் அவுட் தர்மபுரியில் 4 பேர் அதிரடி கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளை விற்க முயன்ற 4 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 20,000 காலியாக உள்ளன. அந்த இடங்களில் ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக 12 லட்சம் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது. சுமார் 6 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட், கடந்த 6ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்கள்) தேர்வுக்கு 2 லட்சத்து 71 ஆயிரத்து 909 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 687 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 

மேலும், பள்ளி கல்வி துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் 32 பேர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர முதல் தாள் தேர்வு பணிக்காக 29,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகளில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் தளங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் சொல்வதை எழுதுவற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தர்மபுரி டவுன் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இருவர், தர்மபுரியை சேர்ந்த இருவர், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் அதற்கான விடைகள் அடங்கிய பட்டியலை ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவின்படி போலீசார் விரைந்து சென்று 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தர்மபுரி டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments: