ஆசிரியர் தகுதித் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (ஆகஸ்ட்17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு சனிக்கிழமையும் (ஆகஸ்ட் 17), இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 18) நடைபெறுகிறது. மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதையடுத்து, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment