நடுநிலைப் பள்ளிகளில் வாரத்தில் 5 பாடவேளை கணினியில் பாடம் நடத்த உத்தரவு
தமிழகத்தில் 8,026 நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 பாடவேளைகளில் கட்டாயமாக கம்ப்யூட்டர் உதவியுடன் வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 8 ஆயிரத்து 26 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இருந்தும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் வகையில் நடுநிலைப்பள்ளிகளில் அந்தந்த பாட ஆசிரியர்கள் பாடங்களை ஒட்டிய விளக்கப் படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாரத்திற்கு குறைந்தது 5 பாட வேளைகளாவது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment