2010 ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு!
Posted Date : 18:01 (09/07/2013)Last updated : 18:08 (09/07/2013)
சென்னை: கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முறையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கொண்டுவந்தது. ஆனால் அதற்கு முன்னர் இருந்துவந்த பதிவு மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
ஆனால் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
|
No comments:
Post a Comment