SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, June 13, 2013

TET APPLICATIONS WILL BE ISSUED FROM JUNE 17 IN GOVERNMENT HIGHER SECONDARY SCHOOLS

வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் அரசு மேல்நிலை பள்ளிகளில் விற்பனை

கருத்துகள்



சிவகங்கை : அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் விற்கப்பட உள்ளன. ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தாள் 1 மற்றும் தாள் 2க்கு வெவ்வேறு விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாள் 1 மற்றும் தாள் 2ஐ தனித்தனி அறைகளில் விற்க வேண்டும். விற்பனை மையத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 
அறிவிப்பு பலகையில், 

* தாள் 1, தாள் 2க்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். 
* டிடிஎட் மற்றும் டிஇஎட் முடித்தவர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்காக தாள் 1க்கு விண்ணப்பிக்க வேண்டும். 
* 10+2+3 முறையில் பயின்று பிஏ, பிஎஸ்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் அல்லது அதற்கு இணையான பாடங்களுடன் பிஎட் பட்டம் பெற்றவர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தாள் 2க்கு விண்ணப்பிக்க வேண்டும். 
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பங்களை ஜூலை 1ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆகிய வாசகங்கள் இடம் பெற்றிருக்க 
வேண்டும். 
விண்ணப்ப கட்டணம் ரூ.50ஐ ரொக்கமாக பெற வேண்டும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பம் எண், வழங்கப்பட்ட நாள் ஆகியவற்றை உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 
தினமும் விண்ணப்பங்கள் விற்ற விவரம், இருப்பு விவரத்தை தொடர்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் (10 பள்ளிகளுக்கு ஒரு தொடர்பு அதிகாரி முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளார்). 

பற்றாக்குறை இல்லாமல் முன்கூட்டியே தொடர்பு அதிகாரிக்கு தெரிவித்து விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பங்கள் விற்பனையில் இடையூறு இருக்கக்கூடாது. தொடர்பு அலுவலர் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட பள்ளிகளில் இருப்பு, தேவை குறித்த விவரத்தை தினமும் மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். 
தேவைக்கேற்ப விண்ணப்பங்களை பெற்று தலைமைஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 

விண்ணப்பங்களை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை வழங்க வேண்டும். தினமும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை விற்க வேண்டும். விற்பனை முடிந்தவுடன் ஒரு விண்ணப்பத்துக்கு ஸீ2 வீதம் விற்பனை செய்தமைக்காக பிடித்தம் செய்து, மீதித்தொகையை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். 
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments: