SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, June 09, 2013

RESERVATION FOR TET

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தேவை: பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
Posted Date : 20:06 (09/06/2013)Last updated : 20:06 (09/06/2013)
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதன் அடிப்படையிலான ஆசிரியர் பணியிட நியமனத்திலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 252 நாள் 5.10.2012 திரும்பிப் பெறப்பட வலியுறுத்தியும் சென்னை தியாகராயநகரில் ஞாயிற்றுக்கிழமை பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் கருத்தரங்கம் நடைபெற்றது. 

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய அரசின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் முனைவர்.வே.வசந்திதேவி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பெ.சண்முகம், த.நீதிராஜன் ஆகியோர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: 

* தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மதிப்பெண் தளர்வு SC/ST/OBC மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்கலாம் என NCTE கூறியிருந்தும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பெண் தளர்வு வழங்காதது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது.  ஆசிரியர் தகுதி தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல.  இதில் தேர்ச்சி பெற்றால் தனியார் பள்ளிகளிலும் வேலை செய்யலாம். அப்படி இருக்க மதிப்பெண் தளர்வு வழங்காதது ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிப்பதோடு இப்பிரிவு மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கப்படவேண்டும்.

* தகுதி தேர்வின் அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க தகுதியை நிர்ணயித்து 5.10.2012 அன்று அரசாணை எண்.252 வெளியிடப்பட்ட்து.  இந்த அரசாணையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்காத்தால் இந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14, 15(4), 16(4) ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது.  மேலும் மத்திய அரசு தனது அலுவலக குறிப்புகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறது.  இவற்றின் சாராம்சம் என்னவென்றால் எந்த காரணத்தை கொண்டும் SC/ST/OBC பிரிவு மக்களின் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்பதே ஆகும்.  அவற்றில் இருந்து தான் மாநிலங்கள் இட ஒதுக்கீடு கொள்கைகளை உருவாக்கி கொள்ளலாம் அதாவது, அவற்றை விட அதிகமான சலுகைகளை வழங்கலாமே தவிர சலுகைகளை மறுப்பதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லை.  அரசாணை எண்.252 திட்டவட்டமாக இட ஒதுக்கீட்டை மறுத்துத் 'தரத்தைப்’ பற்றி மட்டுமே பேசுகிறது. 

* வாய்ப்பே அளிக்காமல் 'தரம்' எங்கிருந்து வரும். ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சீர்மரபினர் பள்ளி, உள்ளாட்சி பள்ளி மற்றும் கிராமத்து பள்ளிகளில் படித்த மாணவர்கள் எந்த அடிப்படை வசதியும், இன்னும் சொல்லப்போனால் நூலகரும் நூலகமும் இல்லாத பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய குடும்பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் பணியிட்த்தை மறுக்கும் செயலாகும்.  .  

* அரசாணை எண்.252 தீர்மானித்த தகுதியின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடம் நிரப்புவதில் பின்பற்றிய இட ஒதுக்கீட்டு வழிமுறை தன்னிச்சையானது (Arbitrary) ஆகும்.  தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (TNPSC) பின்பற்றுவது போல இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் தீர்மானிக்காமல், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி வழங்கப்பட்ட்தாக கூறப்படும் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் முறையான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி பெறக்கூடிய உரிமையை ஒடுக்கப்பட்ட மக்களை இழக்க செய்துள்ளது.  இதன் விளைவு தான் டிசம்பர் 2012 ஆசிரியர் பணியிட நியமனத்தில் உருவாகி உள்ள பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்கள்:

BCM (முஸ்லீம்) - 153
MBC/DNC     - 151
SC - 659     
SCA - 131
ST - 90
மொத்தம் - 1184
                    
தகுதியும் இட ஒதுக்கீடும் என்றுமே முரணாக இருந்த்தில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவமே இட ஒதுக்கீடு ஆகும்.  உரிய சூழலும் தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டால் எவரும் தகுதி உடையவர் ஆக முடியும்.  எனவே ஆசிரியர் தகுதித் தேர்விலும் அதன் அடிப்படையிலான பணி நியமனங்களிலும் SC/ST/OBC மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண் தளர்வு வழங்க இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. 

கல்வியியலில் பட்டயமோ பட்டமோ பெற்றவருக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்பதற்கு பதிலாக கல்வியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவருக்கு பணி நியமன்ங்களை வழங்கி உரிய பயிற்சியினை வழங்குவதே சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் வழி என இக்கருத்தரங்கம் கருதினாலும் இன்றுள்ள சட்ட்த்தின்படி நட்த்தப்படும் தகுதித் தேர்விலாவது சமூக நீதியை காக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமையும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கையையும் கடைப்படிக்க வேண்டுமென இக்கருத்தரங்கம் கோருகிறது.
 
* ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்ணில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் SC/ST/OBC மற்றும் மாற்று திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கவேண்டும். அதற்கான உரிய ஆணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவேண்டும்.  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக தகுதிகள் தீர்மானிக்கப்படவேண்டும்.   

இவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண்.252 நாள் 5.10.2012 திரும்ப பெறப்பட்டு உரிய திருத்தங்களுடன் புதிய அரசாணை வழங்கப்படவேண்டும். டிசம்பர் 2012 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு பின்பு ஏற்பட்டுள்ள SC/ST/OBC மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: