SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, June 17, 2013

ONLY FEMALE TEACHERS IN GIRLS SCHOOL....IS IT A SOLUTION?

பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே... தேவையா இந்த அரசு ஆணை?
Posted Date : 12:06 (09/06/2013)Last updated : 12:06 (09/06/2013)
அரசாணை (1டி) எண்.129, பள்ளிக்கல்வித்துறை, நாள் 09.05.2013-ல் கீழ்க்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது:-

"15) 2013 -14 ஆம் கல்வி ஆண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பாணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலைப்பணியிடங்களுக்கு பொது மறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்போது பணிபுரியும் ஆசிரியர்/ தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது"

பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு ஆணையில் மேற்கண்ட திருத்தத்தை வெளியிட்டுள்ளது.பெண்கள் பள்ளியில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர்கள், பெண் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்திற்கு எவ்வித காரணமும் கூறப்படவில்லை. ஆனால் ஊடகங்கள் கூறும் காரணம் பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்களால் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்கவே இத்தகைய ஆணை என்பதாக இருக்கிறது. அதுதான் உண்மையான காரணம் என்றால், நம் கல்வி முறை எங்கே செல்கிறது? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு கல்வியாளரின் கடமையாகும்.

பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்பதால் பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்துவிடுமா? வயிற்று வலி வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறியாமல் வலி நிவாரண மாத்திரை உண்பதைப்போல் உள்ளது இந்த ஆணை. எந்த ஒரு பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் அதன் மூல காரணத்தை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பள்ளிகளில் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று பிரிப்பதே இந்த பிரச்னைகளுக்கான மூல காரணம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆண், பெண் என்று பாலியல் பாகுபாடு கற்பிக்கப்பட்டு அவர்களைப் பிரித்து வைத்து வளர்ப்பதே தவறு. இவ்வாறு செய்வதன் மூலம் பால்வேறுபாடு கற்பிக்கப்படுவதோடு எதிர் பாலின் மீது ஒரு இனம்புரியத ஈர்ப்பு ஏற்படுகிறது. போலி ஒழுக்க நெறிகளால் மனத்துக்குள் அமுக்கப்படும் இந்த கவர்ச்சி உணர்வுகளே, ஒழுக்க நெறிகளை மீறச் செய்வதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.  

நம் கல்வி முறை இன்றும் ஆதிக்க சக்திகளுக்குத் தேவையான கூலிகளை உருவாக்குவதாகவே உள்ளது. சமூகத்துக்கு பயன்படக்கூடிய மனிதர்களை உருவாக்குவதாக இல்லை. இதையெல்லாம் சிந்தித்து நம் நாட்டு பண்பாட்டுச் சூழலுக்கேற்ற ஒரு கல்விமுறையை உருவாக்கி நம்மிடமுள்ள மனித வளத்தை நாம் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

இன்றைய ஆசிரியர்களை நேற்றைய பள்ளிகள்தான் உருவக்கித் தந்திருக்கின்றன. நாம் உருவாக்கிய மாணவர்கள்தான் ஆசிரியர்களாகி இத்தகைய பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? பெண் என்பவள் ஆணுக்குக் கீழானவள் என்பதை குடும்பம், பள்ளி, சமூகம் என அனைத்துத்தரப்பும் சேர்ந்தே நம் குழந்தைகளுக்குக் காலகாலமாகக் கற்பித்து வருகின்றன. குடும்பத்தில் அப்பாதான் எல்லாம், அம்மா இரண்டாம் நிலைதான்.பள்ளி பாடநூலிலும் அப்பாதான் செய்தித்தாள் படிப்பார் அம்மா வீட்டைப் பெருக்குவார். சமூகத்திலும் பெண்களின் நிலை இன்று வரை முற்றிலும் மாறிவில்லை. என்றாலும் மெல்ல மாறுவதற்கான சூழள் உருவாகிவருகிறது. இந்நிலையில் இதுபோன்ற பால்பாகுபாடுகளை மீண்டும் கடைபிடிக்கத் தொடங்கினால்  பழய நிலைக்கே மனித சமூகம் திரும்பும்.  

எனவே பாலியல் வன்கொடுமைகள் மிகுதியாக சமுகத்தில் நிகழ நம் கல்வி முறையும் ஒரு காரணம். பாலியல் கல்வி நம் நாட்டிற்குத் தேவை என்பதை நாம் ஏதோ ஒழுக்கக்கேடானது எனக் கருதுகிறோம். இது ஒரு புறமிருக்க ஏதோ ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்ததற்காக இப்படி ஒரு ஆணையை வெளியிட்டு ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமூகத்தையே இழிவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

பாலியல் வன்கொடுமைச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.  அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால் இப்படி ஒரு ஆணை தேவையில்லை.

- இரத்தின புகழேந்தி

No comments: