சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
By dn, கொல்கத்தா
First Published : 18 May 2013 03:31 AM IST
மேற்கு வங்கத்தில் 3ஆம் வகுப்பு மாணவனின் தலையை ஆசிரியர் சுவரில் இடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான்.
செüத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நிர்தேஷ்கலி ஷிசு ஷிக்ஷா கேந்திரா பள்ளியில் படிக்கும் மாணவன் பபி ஜோர்தர் (9) கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சக மாணவனுடன் விளையாடி உள்ளான்.
இதையடுத்து, வகுப்பு ஆசிரியர் சம்பா மொன்டல், பபியின் தலையைப் பிடித்து சுவரில் இடித்துள்ளார். படுகாயமடைந்த அந்த மாணவனை கன்னிங் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த மாணவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தான். இதையடுத்து, ஆசிரியர் மொன்டலை போலீஸôர் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment