28ம் தேதி தொடங்குகிறது தொடக்க கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அதிகாரி தகவல்
:நாகை மாவட்ட தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வரும் 28ம் தேதி
தொடங்குகிறது என்று நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிவேல்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது,
தொடக்க கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நாகை மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2013, 2014ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாகை அண்ணா சிலை புனித அந்தோணியார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது.
அதன்படி 28ம் தேதி காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு, மாலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு, 29ம் தேதி காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, மாலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு, 30ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்கள் மாறுதல் கலந்தாய்வு, மாலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கலந்தாய்வு, 31ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைப்பெறுகிறது.
மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும் தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி பதவி உயர்விற்கான கலந்தாய்விலும் குறிப்பிட்ட நாட்களில் கலந்து கொண்டு தங்கள் விருப்ப பணியிடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment