நாகப்பட்டினத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மே 28-ல் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் மே 28-ம் தேதி தொடங்கப்படுகிறது.
இதுகுறித்த கல்வித் துறை செய்திக் குறிப்பு :
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாகை, அண்ணா சிலை, புனித அந்தோனியார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மே 28-ல் தொடங்கி 31 வரை நடைபெறுகிறது. நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதிவு உயர்வு கலந்தாய்வு மே 28 காலையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு பிற்பகலும் நடைபெறும். தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கோரும் கலந்தாய்வு மே 29 காலையும், பதவி உயர்வு கலந்தாய்வு பிற்பகலும் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வு மே 30 காலையும், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு பிற்பகலும் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மே 31 காலை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment