அரசு அலுவலர்களுக்கான தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்
By சென்னை
First Published : 23 May 2013 08:37 AM IST
அரசு அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அரசு அலுவலர்களின் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுதோறும் இரண்டு முறை தேர்வுகளை நடத்துகிறது பணியாளர் தேர்வாணையம். அதன்படி வரும் 24-ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment