SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, May 11, 2013

ENGLISH MEDIUM SECTIONS FOR ALL GOVERNMENT SCHOOLS


அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள்!

First Published : 11 May 2013 01:53 AM IST
வரும் கல்வியாண்டு (2013-14) முதல் தேவைப்படும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும் போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசப் பொருள்கள்: 2013-14-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க கீழ்க்கண்ட உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். "ஸ்டைலஸ்', "ஸ்மால்லர் டெய்லர் ஃப்ரேம்', "அபாகஸ்', "ஃபோல்டிங் ஸ்டிக்', "டிராஃப்ட் ஃபோர்டு வித் காயின்ஸ்', "அரித்மெடிக் டைப்ஸ்', "அல்ஜீப்ரா டைப்ஸ்' ஆகிய உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். இதனால் 2,221 மாணவர்கள் பயனடைவர். இதற்கான திட்டச் செலவு ரூ.18 லட்சம் ஆகும்.
சதுரங்கப் போட்டி: மாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வரும் கல்வியாண்டில் இருந்து 269 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளிடையேயும், பின்னர் கல்வி மாவட்ட அளவிலும், அதன்பிறகு மண்டல அளவிலும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியாக மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
நூலகங்கள் தரம் உயர்வு: வரும் கல்வியாண்டில் மாவட்டத்துக்கு 3 பகுதிநேர நூலகங்கள் வீதம் 96 பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். மாவட்டத்துக்கு 5 ஊர்ப்புற நூலகங்கள் என 160 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரம், கோவை, திருச்சி மாவட்ட மைய நூலகங்கள் ஒவ்வொன்றும் ரூ.50 லட்சம் செலவில் மாதிரி நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.
மதுரை, திருச்சி, விருதுநகர், ஈரோடு ஆகிய 4 மாவட்ட மைய நூலகங்களில் உள்ள குழந்தைகள் பகுதி ரூ.20 லட்சம் செலவில் கம்ப்யூட்டர், கல்வி குறுந்தகடுகள் போன்ற நவீன சாதனங்களுடன் தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விமே 11,2013,07:37 IST

எழுத்தின் அளவு :
சென்னை: "அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
கடந்த கல்வி ஆண்டில், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, சட்டசபையில் அறிவித்தார்.
கடந்த கல்வி ஆண்டு, 320 அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில், தலா, இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. 640 பிரிவுகள் துவங்கப்பட்டு, அதில், 22 ஆயிரத்து, 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டு முதல், தேவைப்படும் அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு, 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
அமைச்சர் அறிவிப்பின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 1 மற்றும் 6ம் வகுப்புகளில், தலா இரு பிரிவுகள், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும். ஆங்கில வழி வகுப்புகள் கூடுதலாக துவங்கப்படும் போது, அதற்கென, ஆசிரியர்களும், கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். ஆனால், கூடுதல் ஆசிரியர் நியமனம் குறித்து, அமைச்சர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
வழக்கமாக, பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மட்டுமே, அமைச்சர் வெளியிட்டார்.

No comments: