டி.கே.ஹரிகோவிந்தராஜ், கோவையிலிருந்து எழுதுகிறார்:ஆண்டு முழுவதும் மாணவர்கள் பள்ளிகளில் படித்து மனதில் இருத்தி, மூளையில் பதிவு செய்து, களைப்புற்றவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு ஓய்வு நிலை தான், ஆண்டு விடுமுறை.
ஆனால், இன்று நடைமுறை வேறுவிதமாக உள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகள், எந்த விடுமுறையையும் விடுவதில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்து விட்டு, தனிப் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், வகுப்புகள் நடத்தி வருகின்றன. அதற்கு தனியாக கட்டணமும் வசூல் செய்து விடுகின்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி விகிதம், 100 சதவீதம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்களை பிழிந்து எடுக்கின்றனர். மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் செய்தித்தாள்களில், 100 சதவீதம் தேர்ச்சி என்று பெரிய விளம்பரம் செய்து, பள்ளிக்கு மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்துகின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும் கட்டணம் வசூலித்து, தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றனர். தன் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிப்பதை, பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். நல்ல பள்ளி என்பது, 100 சதவீதம் தேர்ச்சி காட்டும் பள்ளி. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.இவ்வாறு, தொடர்ந்து ஓய்வின்றி பள்ளி செல்வதால் மாணவர் மனநிலையும், உடல்நிலையும், மறைமுகமாக பெரியளவு பாதிக்கப்படுகிறது. பள்ளியை விட்டு மேற்படிப்புக்குச் செல்லும் போது, விடுதலை பெற்ற விலங்குகள் போல செயல்படுகின்றனர். அது அவர்களுடைய வாழ்க்கையை, பெரிதும் பாதிக்கிறது. கோடை விடுமுறை விடப்பட்டதும், ஓவியப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என்று பலவகையான பயிற்சி முறை தொந்தரவுகள்... இதுவும் ஒருதலைவலியே.கடைசியில், குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் உள்ள பாச உணர்வும், உறவும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment