SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, April 15, 2013

PILING UP OLD ANSWER SHEETS


பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: ஏமாற்றும் தலைமை ஆசிரியர்கள்

பெரியகுளம்: பள்ளிகளில் சேரும் பழைய விடைத்தாள்களை, எடைக்கு போட்டு வரும் பணத்தை கணக்கில் கொண்டு வர,பெரியகுளம் கல்வி மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல் நிலைப்பள்ளிகள், 40 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் மாதாந்திர தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. ஏப்.,20 ல் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும். முழு ஆண்டு விடைத்தாள்களை தவிர, ஆண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் பழைய விடைத்தாள்கள், ஆயிரம் கிலோவுக்கு மேல் சேருகிறது.
மேல் நிலைப் பள்ளிகளில் ஏழு ஆயிரம் கிலோ வரை தேர்வு எழுதிய விடைத்தாள்கள் மற்றும் பழைய புத்தகங்கள் எடைக்கு போடப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயை, பல தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மேற்பார்வையில், வாலிபால், கூடைப் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் பேட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் வாங்குகின்றனர்.
சில தலைமை ஆசிரியர்கள் இதனை பின் பற்றுவதில்லை. பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்திற்கு தெரியாமல், கிடைத்த முழுப் பணத்தையும் தங்களது சொந்த செலவிற்காக பயன்படுத்துகின்றனர். இதனை தடுப்பதற்கு விடைத்தாள் விற்பனையில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க, பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர்.

No comments: