பெரியார் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு
By dn, சேலம்
First Published : 16 April 2013 01:01 PM IST
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் முதுகலை, எம்.பில் மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதுகலையில் எம்.ஏ (தமிழ், பொருளாதாரம், ஆங்கிலம், இதழியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல், பயோ டெக்னாலஜி, கணினி அறிவியல்) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
எம்.பில் படிப்பில் (அப்ளைடு ஜியாலஜி, வணிகம், கணிதம், இயற்பியல், வேதியியல், மேலாண்மை படிப்பு, உணவு கட்டுப்பாடு மற்றும் அறிவியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சான்றிதழில் கம்யூனிகேஷன் எக்ஸெலன்ஸ், கவுன்சிலிங் சைக்காலஜி, என்.ஜி.ஓ மேனஜ்மென்ட் பார் சோசியல் டெவலப்மென்ட், நானோசயின்ஸ் அன்ட் நானோ டெக்னாலஜி ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.periyaruniversity.ac.in/files/AN.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment