ஊத்தங்கரை அருகே பள்ளி ஆசிரியை கடத்தல் வேன் டிரைவர் மீது புகார்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி ஆசிரியையை மினி வேன் டிரைவர் கடத்தி சென்றதாக போலீசில் அவரது கணவர் புகார் கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வீகன் (36). கார்மென்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர், கட்டமடுவு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இளநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தெய்வீகன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கட்டமடுவு பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் பவுன்குமார் கடத்தி சென்றதாக சிங்காரப்பேட்டை போலீசில் தெய்வீகன் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்
No comments:
Post a Comment