125 மாணவர் பயலும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்: பெற்றோர் அதிருப்தி
ஏப்ரல் 20,2013,08:22 IST
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 125 மாணவர்கள் கொண்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, தலைமை ஆசிரியர் ஒருவருடன் செயல்படுகிறது. இங்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாததால்,பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் கட்டுவிநாயகர் கோயில் தெருவில், ஸ்ரீராமதனலட்சுமி அரசு உதவிபெறும் துவக்க பள்ளி உள்ளது.125 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 1914ல் நிறுவப்பட்ட இந்த பள்ளியில், பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் முரளிதரன், ஆசிரியை மாரியம்மாள் என இருவர் மட்டுமே பணியில் இருந்தனர்.
கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால், மாரியம்மாள் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது, தலைமை ஆசிரியர் ஒருவரே, அனைத்து வகுப்புகளையும் கவனிக்கிறார். மாணவர்களின் கல்வி தரம் குறித்து, பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே அவர்கள், நேற்று காலை பள்ளி முன் கூடினர். கல்வி பாதிக்கப்படுவதாக, தலைமை ஆசிரியர் முரளிதரனிடம் புகார் தெரிவித்தனர்.
கற்பகம், 59, "நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவி. எனது மகள் படித்து, தற்போதும் பேரனும் இங்கு படிக்கிறான். கல்வியின் தரம் நன்றாக இருப்பதால், மற்ற தனியார் பள்ளி மாணவர்களை கூட இங்கு சேர்க்கின்றனர். சில ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது,&'&' என்றார்.
மருதுபாண்டி, "அனைவருக்கும் கல்வி திட்டத்தில் விகிதாச்சார முறைப்படி ஆசிரியர்கள் நியமனம் உள்ளது. இங்கு 125 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை இருந்தார். அவரும், விருப்ப ஓய்வு பெற்றபின், ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது" என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், "ராஜபாளையத்தில் மட்டும் 38 ஆசிரியர் பணியிடம் உபரியாக உள்ளது. அரசு பள்ளி என்றால், உடனடியாக நிரப்பலாம். அரசு உதவிபெறும் பள்ளி என்பதால், தாமதமாகிறது. காலி பணியிடத்துடன் கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டு, அடுத்த மாதம் முடிவில், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்
No comments:
Post a Comment