மாதர் சங்க புகாரால் நடவடிக்கை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு
கருத்துகள்
வாடிப்பட்டி: மதுரை அருகே பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மதுரை கூடல்நகர் அருகேயுள்ளது குலமங்கலம். இக்கிராமத்தில் அரசு «ம்ல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராக ஹெரான்ஸ், கம்ப்யூட்டர் ஆசிரியராக விஜயகுமார் மற்றும் ஓவிய ஆசிரியராக செல்வக்குமார் பணியாற்றுகின்றனர். இவர்கள் மூன்று பேரும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்தன.இது குறித்த தகவல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனை மதுரை எஸ்பி பாலகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்குமாறு மாதர் சங்கத்தினரை எஸ்பி அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் மாதர் சங்கத்தினர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர்கள் ஹெரான்ஸ் (50), விஜயகுமார் (40) ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.போலீசார் நேற்று மதியம் மதுரை ஜேஎம் 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் இருவரின் முகத்தையும் துணியில் மறைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த சில வக்கீல்கள் ஆசிரியர்களின் முகத்தை காட்டுமாறு துணிகளை உருவியுள்ள னர். அருகே நின்ற ஆசிரியர்களின் உறவினர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். அதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment