பிப்ரவரி 11,2013,15:33 IST
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கட்டிடப் பணிக்கு, துவக்கப்பள்ளி மாணவிகளை, தண்ணீர் சுமக்க வைத்தது குறித்து, ஏ.இ.இ.ஓ., நேரில் விசாரணை செய்து, ஆசிரியைகளை எச்சரித்துச் சென்றார்.
கெங்கவல்லி அருகே கூடமலை பஞ்சாயத்து, கவுண்டன்பாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 27 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2011 -12ம் ஆண்டு, எஸ்.எஸ்.ஏ., மூலம், 5.50 லட்சம் ரூபாயில், வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கடந்த, 5ம் தேதி காலை, 9.50 மணியளவில், கட்டிடத்தின் உட்புற செங்கல் சுவரில் பூசப்பட்ட சிமென்ட் கலவைக்கு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. அதற்காக, மாணவிகள் சவுந்தர்யா, பிரிதீபா ஆகிய இருவரும் வாலி, குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து, கட்டிடத்தில் ஊற்றினர். தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், தலைமை ஆசிரியரை எச்சரித்துச் சென்றனர்.
அதுகுறித்து, கெங்கவல்லி ஏ.இ.இ.ஓ., வாசுகிக்கு, புகார் சென்றது. அதையடுத்து, நேற்று முன்தினம், பள்ளியின் தலைமை ஆசிரியை அன்பழகி, மாணவிகளின் பெற்றோரிடம், ஏ.இ.இ.ஓ., நேரில் விசாரணை செய்தார். அப்போது, "பள்ளி மாணவ, மாணவியரை கட்டிட பணி உள்ளிட்ட வேலைக்கு இனிமேல் பயன்படுத்தமாட்டோம்" என, தலைமை ஆசிரியை மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.
No comments:
Post a Comment