SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, February 02, 2013

உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்'

உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்' 

""குடும்பத்துக்கு ஆணி வேர் தாய் என்பதைபோல், சமூகத்துக்கு தாய் ஆசிரியர்கள்,'' என சென்னை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் பேசினார்.விவேகானந்தா சேவாலயம் சார்பில், ஆசிரியர்களுக்கான புத்துணர்வு முகாம், திருப்பூரில் நேற்று நடந்தது. விவேகானந்தா சேவாலயம் நிர்வாகி செந்தில்நாதன் தலைமை வகித்தார். "உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்' என்ற தலைப்பில், சென்னை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த, சுவாமி விமூர்த்தானந்தர் பேசியதாவது

கடும் வறட்சி நிலவும்போது, மண்ணில் உயிரினங்கள் இல்லாததுபோல் வறண்டு காணப்படும்; மழை பெய்தால், பல செடிகள் வளரும்; உயிரினங்கள் கண்ணில் தெரியும். 

வறட்சி காலத்தில், அவை, உயிரோட்டமுடன் பூமிக்குள் இருந்து, மகிழ்ச்சி கிடைத்ததும் உயிரோட்டத்தை பெறுகிறது.அதுபோலவே, உங்களிடத்திலும் திறமை உள்ளது. அவற்றை, சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் புறச்சூழல்களால்பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் அபரிமிதமான ஆற்றலும் உண்டு என்பதை உணர வேண்டும்.உயிரோட்டமுள்ள ஆசிரியரால் உற்சாகமுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். பலவீனங்களை தள்ளிவிட்டு, உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகத்துடன் இருந்தால், உயிரோட்டமுள்ள மாணவர்களை ஈர்க்க முடியும். நல்ல மாணவர்களை உருவாக்கும் படைப்பாற்றல் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியப்பணி என்பது, இயந்திரத்தனமானதல்ல; மாணவர்களை உணர்வு 
ரீதியாக நேசிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையும், தன்னம்பிக்கையும் வேண்டும்.பள்ளி என்பது ஆசிரியர்கள் ஆடு மேய்த்தலை போலவும், மாணவர்களுக்கு சிறையாகவும், பெற்றோருக்கு விளையாட்டு திடலாகவும் காட்சியளிக்கிறது. வீட்டில்மகிழ்வாக இருக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வந்தால் சோர்வாகி விடுகின்றனர்.

மாணவர்களை ஈர்க்கும் ஆசிரியர்களாக, தினம், தினம் ஒரு புதிய தகவலை தருவதோடு, ஆர்வம், மொழி நடை, சிரித்த முகம், சிறிதளவு நகைச்சுவை உணர்வுடன், மாணவர்களை அணுகினால் போதும். ஆசிரியரை பிடித்தால், அந்த பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் மீது கோபப்படாமல், அன்பும்,நம்பிக்கையும் காட்டுங்கள்.சிறந்த சமுதாயத்தையும், சிறந்த நாட்டையும் அமைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு; குடும்பத்துக்கு ஆணி வேர் தாய்; சமூகத்துக்கு தாய் ஆசிரியர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களைவசீகரிக்கும் குணத்தை பெறுங்கள்; மாணவன் மூளை உங்கள்வசப்படும்,இவ்வாறு, அவர் பேசினார்.


--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

No comments: