தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 45 சதவீத குழந் தைகளுக்கு எளிய பத்தியை வாசிக்கவோ, கழித்தல் கணக்குளை போடவோ முடியவில்லை என்று முன் னாள் துணைவேந்தர் வசந்தி தேவி தெரிவித்தார்.தமிழகத்தில் 2012ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கல்வி நிலையின் ஆண்டறிக்கையை பிரதம் மற்றும் எய்ட் இந்தியா ஆகிவை வெளியிட்டன. இதில் மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேசியதாவது:தமிழ்நாட்டின் கல்வி நிலை குறித்து கடந்த 2005ம் ஆண்டு முதல் அசர் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. 2012ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கையில் தெரிய வரும் விவரங்கள் வேதனை அளிப்பதாக உள்ளது. இங்கு தொடக்க கல்வியில் குழந்தைகள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.2012ம் ஆண்டுக்கான ஆய்வுப்படி தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 19713 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளி செல்கிறார் களா, எந்த பள்ளிக்கு செல்கிறார்கள், படிக்கிறார்களா, பள்ளிகள் எப்படி நடக்கின்றன, அடிப்படை வசதிகள் உள்ளதா கட்டாய கல்வி உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பவை இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அரசுப் பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளின் வருகை 69 சதவீதம், தனியார் பள்ளிகளில் 29 சதவீதம் வருகை உள்ளது. ஆனால் அரசுப் பள்ளி களை விட்டு தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகள் ஓடுகின்றனர்.
இந்த நிலை ஏன்? அதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த அவலத்துக்கு கார ணம் என்ன?அரசுப் பள்ளிகளில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் எளிய பத்தியை வாசிக்கும் குழந்தைகளின் சதவீதத்தை பார்த்தால், 3ம் வகுப்பில் 30.1 சதவீதம், 4ம் வகுப்பில் 48.9 சதவீதம், 5ம் வகுப்பில் 63.5 சதவீதம் குழந்தைகளால் முடிகிறது.எளிய கழித்தல் கணக்கை போடுவதில் 3ம் வகுப்பு குழந்தைகள் 17.4 சதவீதம், 4ம் வகுப்பு குழந்தைகள் 42 சதவீதம், 5ம் வகுப்பு குழந்தைகள் 52.6 சதவீதம் பேரால் முடிகிறது. தமிழகம் எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கிறது என்ற மாயை உள்ளது. தேசிய சராசரி கல்வி வீதத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளது என்பதுதான் உண்மை.அதாவது 2007, 48.2 சதவீதமாக இருந்த கல்வி நிலை 2012ல் 47.5 சதவீதமாக உள்ளது. இது ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. அதேபோல பள்ளிக் குழந்தைகள் டியூஷனுக்கு செல்லும் அவல நிலை தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது.இது போன்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் இந்த அசர் சர்வேயில் உள்ளது. ஆனால் இந்த சர்வே சரியில்லை என்று தமிழக அரசு கூறிவந்தது. இப்போது அதை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதுதான் உண்மை நிலை என்று பெற்றோருக்கு இதை புரிய வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment