SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, December 16, 2012

TEACHERS ORDER ISSUING FUNCTION IN CHENNAI


சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது சாதனையாக இருந்தாலும், அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு @பாதுமான கழிப்பிட வசதிகள் இல்லை.
ஆங்காங்@க இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர்.
முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொ”க்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள் புலம்பினர்.
ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர். 

அரை மணி நேரத்தில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர்.நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர்.

No comments: