பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த, 2010-11ம் கல்வியாண்டு, தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.கடந்த, 2010-11ம் கல்வியாண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும், 284 பள்ளிகள், ஆரம்பப்பள்ளியிலிருந்து, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில்,தற்போது வரை, தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மிகவும் குறுகிய காலத்தில் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள், கடந்த நிலையில், காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இதுவரை நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
,

No comments:
Post a Comment