பல்லடம்: பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வினியோகம் செய்ததைகண்டித்து, இந்து அமைப்பினர், நேற்று, பள்ளியைமுற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமிநாயக்கன்பாளையத்தில்அரசு உதவி பெறும் ஸ்ரீராமசாமி நாயுடு வித்யாலயாமேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம், இப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பைபிள் (புதியஏற்பாடு) வழங்கப்பட்டது. இதையறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கிய பைபிள்களை பள்ளி நிர்வாகத்தினர் திரும்பப் பெற்றுள்ளனர்.இத்தகவல் தெரிந்ததும், பா.ஜ., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை சேர்ந்தவர்கள்அப்பள்ளிக்கு சென்றனர். "மாணவர்களுக்கு பைபிள் வழங்கி, மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா" எனதலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி பதிலளிக்கையில், "மாணவ, மாணவியருக்கு பைபிள்வழங்கப்பட்டது எனக்கு தெரியாது. இதுகுறித்து புகார் வந்ததும் மாணவ, மாணவியரிடம் இருந்துபைபிள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டன. இச்செயலில் ஈடுபட்டது யார்? என கண்டறிந்து துறை சார்ந்தநடவடிக்கை எடுக்கப்படும்," என்று உறுதியளித்தார். அதையடுத்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர்.இப்பிரச்னை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment