பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: பள்ளி கல்வி இயக்குனர்
By dn, சென்னை
First Published : 17 November 2012 01:12 PM IST
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவ - மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ, மாணவியர்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment