ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு செய்த நேரம்:2012-11-23 10:54:38
கோவை, : கோவையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக் கையை வலியுறுத்தி நேற்று பேரணி நடந்தது. மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் வரை பேரணியும், அதை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் அரசு, மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 6வது ஊதிய குழுவில் அறிவித்த அனை த்து சலுகைகளையும் தமிழக அரசு வழங்கவேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக முன்னு ரிமை அடிப்படையில் ஆசிரி யர் நியமனம் செய்யவேண் டும். கடந்த 1988ம் ஆண்டிற்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டு மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை அளிக்கவேண்டும். பங்களிப்பு ஓய்வூ திய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்யவேண்டும்.
அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆசிரியர்கள் நியமனம் செய்யவேண்டும்.
பதவி உயர்வு மற்றும் மாறுதலில் ஏற்பட்ட காலி பணியிடங்களை முன்னு ரிமை பட்டியல் படி பதவி உயர்வு மூலமாக நிரப்பவே ண்டும்.
பகுதி நேர தொழில் கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்தவேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒளிவு மறைவி ன்றி கவுன்சிலிங் நடத்தவேண்டும் என வேண் டுகோள் விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment