நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்
- First Published: Nov 18, 2012 1:46 AM
- Last Updated: Nov 18, 2012 1:46 AM
நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டாராம்.பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து, பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமகிருஷ்ணன் உறுதி செய்தார்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved
No comments:
Post a Comment