SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, November 14, 2012

FIRST TERM BOOKS CAN BE USED FOR SECOND TERM ACTIVITIES

முதல் பருவ பாடப் புத்தகத்தை திரும்ப பெறும் அரசு பள்ளிகள்-13-11-2012

 
ஈரோடு: இரண்டாம் பருவ கல்வி இணை செயல்பாட்டுக்காக, முதற்பருவத்துக்கான புத்தகங்களை, குழந்தைகளிடம் இருந்து, அரசு பள்ளிகள், திரும்ப வாங்கி வைத்து கொள்ளும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், சமச்சீர் கல்வி முறையில், முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றனர். முழு கல்வியாண்டுக்குரிய புத்தகங்கள், மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வு நடத்தப்பட உள்ளது.
தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் முதல் பருவத்துக்கான தேர்வை முடித்து, விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவத்துக்கான பாட வகுப்புகளை நடத்துகின்றன. மூன்று பருவத்துக்கும், பருவம் வாரியாக கல்வி இணைச் செயல்பாடுகள் பாடமாக உள்ளது.
குழந்தைகளின் பாடத் திட்டத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளை, செயல்பூர்வமாக, தெரிந்து கொள்ள, கல்வி இணைச் செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிக்சர்ஸ் கலெக்சன், போட்டோ கலெக்சன், காய்கறிகள் மற்றும் பூக்களின் வகைகளை, செயல் பூர்வமாக, செய்முறையாக அட்டைகளில் ஒட்டி, அவற்றை முழுமையாக அறிந்து கொள்ள, கல்வி இணை செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை மேம்படுத்தவே, இச்சிறப்பு ஏற்பாடுஇதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும், 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி குழந்தைகள், அவரவர் வசதிக்கேற்ப, கல்வி இணைச் செயல்பாட்டை, விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் மூலம் நிறைவேற்றுகின்றனர்.
ஆனால், அரசு பள்ளி குழந்தைகளுக்கு, கல்வி இணை செயல்பாடுகள் பெரும் செலவாக உள்ளனவசதி வாய்ப்பற்றோர், கிராமத்தில் வசிப்போர், இப்பணியைச் செய்ய சிரமப் படுகின்றனர். இதனால், தங்கள் பள்ளி குழந்தைகளும், கல்வி இணைச் செயல்பாட்டில், திறன் வாய்ந்தவர்களாக உருவாக வேண்டும் என, யோசித்த சில அரசு பள்ளிகள், முதல் பருவ புத்தகங்களை, சம்பந்தப்பட்ட அரசு பள்ளியே, திருப்பி வாங்கி வைத்துள்ளது.
இரண்டாம் பருவ கல்வி இணைச் செயல்பாட்டுக்கு, முதற்பருவ புத்தகத்தில் உள்ள படங்கள், விளக்கங்கள், கருத்துக்களை பயன்படுத்துகின்றனர். அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், "கல்வி இணைச் செயல்பாட்டுக்கு படம், போட்டோ, கருத்து விளக்க பொருட்கள் வாங்கி, மாதம், 100 முதல், 200 ரூபாய்க்கு மேல் செலவாகும் பழைய புத்தகங்களில் இருந்து அவற்றை எடுத்து பயன்படுத்தினால், பெற்றோர் சிரமத்தை குறைக்கலாம் என்பதால், இப்புத்தகங்களை வாங்கி வைத்துள்ளோம்&' என்றனர்.

No comments: