வகுப்பறையில் தூங்கும் ஆசிரியரின் குழந்தை: மரத்தடியில் மாணவர்கள்-13-11-2012
திருவள்ளூர்: ஆசிரியரின் குழந்தை வகுப்பறைக்குள் தூளியில் தூங்கிக் கொண்டிருக்க, மாணவர்கள் மரத்தடியில் பாடம் பயில்கின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி ஊராட்சி, இருளர் காலனியில், 300 பேர் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்காக, "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பாக துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, தற்போது 28 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
இதில், பெண் ஆசிரியர் ஒருவர், தன் கைக்குழந்தையுடன் பள்ளிக்கு வருகிறார். பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, குழந்தையை வகுப்பறையில் தூளி கட்டி தூங்க வைக்கிறார். குழந்தை தூங்குவதற்கு இடையூறு இல்லாமல் இருக்க, மாணவர்கள், வகுப்பறைக்கு வெளியில் மரத்தடியில் பாடம் பயில்கின்றனர். இதனால், மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மணியிடம் கேட்டபோது, "ஆசிரியரின் வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் சென்று விட்டதால், குழந்தையுடன் பள்ளிக்கு வருகிறார் என, கூறினார். இனிமேல், குழந்தையை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம் என, அவரிடம் அறிவுறுத்தி உள்ளேன்,&'&' என்றார்.
No comments:
Post a Comment