விருத்தாசலம்: விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் பல மாதங்களாக தொடர் மின்வெட்டு நிலவி வருவதால், தொழில்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலக பணிகள் கடுமையாகப் பாதித்துள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கணினி பயிற்சி, இயற்பியல், வேதியல் செய்முறை பயிற்சிகளை செய்ய முடியாமல் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் வசதிக்காக நிர்வாகத்தினர் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறைகளை அமைத்துள்ளனர். அதன் மூலம், மாணவர்கள் கணினி பயற்சி பெறுகின்றனர். வகுப்பறைகளில் மின் விளக்குகள், மின்விசிறிகள் இயங்குகின்றன.அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மரபுசாரா எரிŒக்தி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முன்மாதிரியாக இப் பள்ளியில் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை செய்யப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் விஜயகுமாரி கூறுகையில், "எங்கள் பள்ளியில் 10 மாதமாக சேலார், காற்றாலை மின் உற்பத்தி முறை செயல்படுகிறது. சோலார் சிஸ்டம் மூலம் 350 வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 300 வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தடையற்ற மின்சாரம் கிடைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்காமல், பெற்றோர்களுக்கு அளித்த உறுதியை காப்பாற்றியுள்ளோம். மேலும், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சோலார் வாட்டர் ஹீட்டர் பொருத்தியுள்ளோம்.இதற்கான செலவு ஒரு லட்Œத்து 70 ஆயிரம் ரூபாய் ஆனது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் மரபுசாரா எரிŒக்தித் துறை, 30 சதவீதம் மானியம் வழங்கியுள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றார்.