இரண்டாம் பருவ புத்தகங்கள்: பதிப்பகங்களுக்கு அழைப்பு-07-08-2012
சென்னை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, தனியார் பதிப்பகங்கள், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய தலைவர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இரண்டாம் பருவத்திற்கான பாடத் திட்டம், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பெற்றோர், பொதுமக்கள், மாணவர் பார்வைக்காக, மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப் பட்டு உள்ளது.
இந்த வகுப்புகளுக்கு, தமிழ் நீங்கலாக தயார் செய்யப்பட்ட இதர பாடங்களுக்கு, பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெற, 21ம் தேதிக்குள் பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம். புத்தகங்களை, இரு நகல்களுடன், "உறுப்பினர்-செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை௬&' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். பாடப் புத்தகத்தின் தோராய விலையை குறிப்பிட வேண்டும்.
புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment