பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக தேவராஜன் நியமனம்
First Published : 05 Aug 2012 12:26:02 AM IST
சென்னை, ஆக. 4: பள்ளிக் கல்வித் துறையின் புதிய இயக்குநராக கே. தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான அவர், இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வரும் திங்கள்கிழமை அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியைத் தொடங்கிய அவர், உதகமண்டலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றில் இணை இயக்குநராக இருந்துள்ளார். தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ப. மணி ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய இயக்குநராக கே.தேவராஜனை நியமித்து தமிழக அரசு உத்தர
விட்டுள்ளது.

No comments:
Post a Comment