SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, July 11, 2012

TRB JD WARNS NOT TO GET CHEATED FOR TET EXAM

டி.இ.டி.,தேர்வுக்கு பணம் கொடுத்து ஏமாறாதீர்: டி.ஆர்.பி.,இணை இயக்குனர் எச்சரிக்கைடி.இ.டி., தகுதித்தேர்வுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர் என ஆசிரியர்களுக்கு டி.ஆர்.பி.,இணை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரித்துள்ளார்.
இளநிலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நாளை நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை டி.ஆர்.பி., இணை இயக்குனர் சேதுராம வர்மா கவனிக்கிறார். சிவகங்கையில் இன்று சி.இ.ஓ., ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இத்தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விதிமுறை குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது: 5 மாவட்டத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேரும், 50 ஆயிரத்து 400 பி.எட்., ஆசிரியர்களும் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வில் யாரும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தள தேர்வு மையம் ஒதுக்கப்படும். குறுக்கு வழியில் வெற்றி பெற யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.முறைகேடு இன்றி, 100 சதவீத நம்பக தன்மையுடன் தேர்வு நடக்கிறது. மார்க் அடிப்படையில் பி.எட்., ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும். வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பில் பணியில் சேரலாம். முதன் முறையாக குறைந்த ஊழியர்களை கொண்டு, அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு சில விண்ணப்பதாரர்கள் தவறு செய்திருந்தபோதிலும், முதன்முறை என்பதால் தேர்வுக்கு அனுமதித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

No comments: