ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி கைது திருநெல்வேலி: ஆசிரியரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்புரத்தை சேர்ந்தவர் எபினேசர் ஜெபக்கனி. இவர் கடந்த 2001ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 2007ம் வரையிலான ஆண்டிற்கு சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார்.
இவரது மனுவை பரிசீலனை செய்த கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியம் ஜெரால்டு வசீகரன்(45), 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மறுத்த எபினேசர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமியிடம் புகார் மனு அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது ஜெரால்டு வசீகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெரால்டு விசாரணைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஜெரால்டு முன்னர் நெல்லையில் பணிபுரிந்தபோது லஞ்ச புகார் காரணமாக நான்குநேரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் நெல்லை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment