SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, July 12, 2012

sexual harassing teachers-dinamalar news

"சில்மிஷ ஆசிரிய, ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்களது கல்விச் சான்றிதழும் ரத்து செய்யப்படும்' என, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ள போதும், நாமக்கல் "சில்மிஷ' ஆசிரியர் மீதான நடவடிக்கையை கல்வித்துறை அதிகாரிகள், கிடப்பில் போட்டுள்ளது, பெற்றோரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

நாமக்கல் அருகே வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக சத்தியபிரபு, 33, பணிபுரிந்து வந்தார். அவர், பள்ளி ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதுபோல் பள்ளி மாணவியரிடமும் "சில்மிஷ'த்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

புகார்:ஆசிரியர் சத்தியபிரபுவின் நடவடிக்கையால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஆசிரியைகள், அதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் மறைமுகமாக புகார் செய்துள்ளனர். எனினும், அவர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர்.அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் சத்தியபிரபு, தொடர்ந்து மாணவியரிடம், "சில்மிஷ'த்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, அதை பொறுக்க இயலாத மாணவியர் சிலர், "சில்மிஷ' ஆசிரியர் சத்தியபிரபுவின் நடவடிக்கைகள் பற்றி, தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்ற மாதம், 25ம் தேதி, பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவு படி, ஆசிரியர் சத்தியபிரபுவை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அலட்சியம்:
"பள்ளி மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்களது கல்விச் சான்றும் ரத்து செய்யப்படும்' என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், அவர் மீதான நடவடிக்கை மட்டும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, துறை ரீதியாக முதலில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர். இது, தற்காலிக பணி இடைநீக்கம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதல் ஆறு மாதத்திற்கு, அவர் பெற்று வந்த ஊதியத்தில், 50 சதவீத தொகை ஊதியமாக வழங்கப்படும்.ஆறு மாதத்திற்கு மேல் "சஸ்பெண்ட்' நடவடிக்கை நீடித்தால், அவருக்கு, 75 சதவீத தொகை ஊதியமாக வழங்கப்படும். எனவே, அரசுத் துறை நடவடிக்கையை பொறுத்தவரை, "சஸ்பெண்ட்' எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். எனவே, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், வடுகப்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியபிரபுவை, பணி நீக்கம் செய்ய வேண்டும்.அவர் மீதான நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், சத்தியபிரபு மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், விரைந்து மேற்கொள்ளாமல் சுணக்கம் காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எப்போது?
இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது:
"ஆசிரியர் சத்யபிரபு மீது "சில்மிஷ' குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், "17பி' சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
நான்கு ஆண்டாக ஒரே பள்ளி: ஆசிரியர் சத்தியபிரபு சென்னை பல்கலையில், கடந்த, 2000ம் ஆண்டு, பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். அதே பல்கலையில், முதுகலை ஆங்கில பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில்., படித்துள்ளார். அவர் கடந்த, 2007ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம் அரூரில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஓராண்டு பணிபுரிந்த சத்தியபிரபு, அங்கிருந்து இடமாற்றம் பெற்று வடுகப்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து நான்காண்டாக அவர் வடுகப்பட்டி பள்ளியில் பணிபுரிந்துள்ளார். ஆசிரியர் சத்தியபிரபுவின் தந்தை பெரியசாமி, ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். சத்தியபிரபுவின் மனைவி சங்கீதா, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொகுப்பூதியத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

ஆசிரியைகளிடமும் தவறாக பேசியதால் பணியிலிருந்து விடுவிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2009-10ம் ஆண்டில், பள்ளி தொகுப்பு கருதாய்வு மையங்களுக்கு ஆசிரியர் சத்யபிரபு, ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் நடந்த ஆங்கில பயிற்சி முகாமில் பங்கேற்றார்.
பயிற்சியில் நடத்தப்பட்ட விவரங்களை, ஒன்றிய அளவில் நடக்கும் பயிற்சி முகாமில், கருத்தாளாக பணியாற்றி, ஆசிரியர்களுக்கு விளக்க வேண்டும். அதன்படி சேந்தமங்கலம் வட்டார அளவில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் குறித்த பயிற்சி அளித்து வந்தார்.அப்போது, ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, வழக்கமாக கொண்டிருந்தார். அதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் பலர், ஆங்கில மொழி பயிற்சிக்கு வருவதை தவிர்த்தனர். கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்துக்கு, அனைவரின் புகாரும் சென்றது. அதைத் தொடர்ந்து, "சில்மிஷ' ஆசிரியர் சத்யபிரபு, கருத்தாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments: