SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, July 04, 2012

NAGAI COLLECTOR EMPHASISE ON RTE FOR PRIVATE SCHOOLS

தனியார் பள்ளிகளில் அரசின் இடஒதுக்கீடு கண்காணிக்க தன்னார்வலர் குழு கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2012-07-04 10:35:36
நாகை, : நாகை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசின் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா என்ப தை கண்காணிக்க 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் முனுசாமி தெரிவித்தார். 
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றி தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதை துவக்கி வைத்து கலெக்டர் முனுசாமி பேசியதாவது:
6 முதல் 14 வயது வரை யுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளிப்பதற்காக 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும் மாநில சட்டத்திற்கு உட்பட்டு 6 முதல் 14 வய துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக்கல்வி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண, வசதி குறைந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் கட்டாய கல்வியின் நோக்கம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வட்டார அளவில் 30 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகதான் தமிழக அரசு 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடையே ஏற்றத்தாழ்வை போக்கும் வகையில் ஒரே மாதிரியான புத்தகப்பை, காலனி, இலவச சீருடை போன்றவற்றை வழங்கி உள்ளது. தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியும் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தன்னலம் பாராமல் பொதுநலன் கருதி மனித நேயத்துடன் ஆசிரியர்கள் சேவை செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் கட்டாயக்கல்வி முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் அர சின் ஒதுக்கீட்டை கட்டா யம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதை தன்னார்வலர்கள் கண்காணித்து அறிக் கை அனுப்ப வேண் டும். ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் குறித்த பணிகளை தன்னார்வலர்கள் மேற் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள 6 முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் தன்னார்வலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் முனுசாமி பேசினார்.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புலவர் தஞ்சைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் கமலா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments: